சிங்கப்பூரில் ஒரேநாளில் புதிதாக 17 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 16) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 243ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து, தினசரி சம்பவங்களில் இந்த எண்ணிக்கை தான் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 109ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 134 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் (சம்பவங்கள் 227, 229, 230, 231, 232, 233, 238, 239, 240, 241 மற்றும் 243).

மேலும் அவர்கள் பிரான்ஸ், ஸ்பெயின், கிழக்கு ஐரோப்பா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

மேலும் புதிய சம்பவங்களில் நான்கு பேர் முன்னர் இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

அதே போல், 2 பேருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் நுழையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு..!

#coronavirus Singapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil