COVID-19: சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

சிங்கப்பூருக்குள் வரும் அனைத்து வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கும், 14 நாள் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வீட்டு பணியாளர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இதையும் படிங்க : புகைபிடித்து சிக்கிய நபர்; அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததற்காக சிறையில் அடைப்பு..!

இந்த நுழைவு ஒப்புதலை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் COVID-19 வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது திங்கள்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணிப்பெண்கள் தங்கள் ஓய்வு நாட்களில் வீட்டிலேயே
இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முதலாளிகள், ஓய்வு நாட்களில், பணிப்பெண்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது அல்லது வேலைக்குரிய ஊதியத்தைக் கொடுக்கவேண்டும்

உள்ளூர் தொலைபேசியை பயன்படுத்துவதையும், 14 நாள் காலகட்டத்தில் MOM தொடர்பு கொள்ளக்கூடியதாக வகையில் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒப்புதல் பெறும் வரை பயணத் திட்டங்களைச் மேற்கொள்ள வேண்டாம் என்று வீட்டுப் பணியாளரிடம் கூற வேண்டி, முதலாளிகள் மற்றும் முகவர்களுக்கு அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்குள் நுழையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு..!

#coronavirus Singapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil