சிங்கப்பூருக்குள் நுழையும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவு..!

ஆசியான் (ASEAN) நாடுகள், ஜப்பான், சுவிட்சர்லாந்து அல்லது யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்டு, சிங்கப்பூருக்குள் வருவோருக்கு 14 நாள் கட்டாய வீட்டில் தங்கும் அறிவிப்பு வழங்கப்படும்.

இது திங்கள்கிழமை (மார்ச் 16) இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மேலும், சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள், நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும், என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இருந்து கடல் மற்றும் நிலம் ஆகிய வழிகளை பயன்படுத்தும் சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் இது பொருந்தாது.

மலேசியாவில் இருந்து ஒவ்வொரு நாளும் 300,000 பேர் நில சோதனைச் சாவடிகளை கடந்து செல்கின்றனர் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

புதிய எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வெளிநாட்டில் இருந்து வரும் COVID-19 சம்பவங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்; வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது..!

#coronavirus Singapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil