சிங்கப்பூரில் COVID-19 ஆதரவு மானியங்களைப் பெற ஏமாற்றிய இருவர் மீது குற்றச்சாட்டு..!

2 men charged with forging retrenchment letters to get COVID-19 support grants

COVID-19 ஆதரவு மானியங்களைப் பெறுவதற்காக வேலை இழந்ததாகப் பொய்யான கடிதங்களை வழங்கியதாக இரண்டு ஆண்கள் மீது நீதிமன்றத்தில் (ஜூலை 1) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதில் ஒருவருக்கு COVID-19 காரணமாக தனது வேலையை இழந்துவிட்டதாக பொய்யாக கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

29 வயதான சௌ ஜியா சுவானுக்கு ஒரு மோசடி, நான்கு முறை மோசடி முயற்சிகள் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் 43 வயதான எட்வர்ட் கோ மீது இரண்டு முறை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சௌ, தற்காலிக நிதியுதவி விண்ணப்பத்தாளில் தாம் COVID-19 காரணமாக வேலை இழந்ததாகப் பொய்த் தகவல் அளித்துள்ளார்.

மேலும் அவர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்திடம் (MSF) S$500 நிதியுதவி பெற்றதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதத்தில் சோவ் மீண்டும் MSFஐ ஏமாற்ற முயன்றார், அதை தொடர்ந்து மேலும் மே 5 அன்று COVID-19 ஆதரவு மானிய விண்ணப்பத்தில் தொற்று காரணமாக தனது வேலையை இழந்ததாக அறிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாதத்திற்கு S$800 ரொக்க மானியத்தை மூன்று மாதங்களுக்கு வேண்டியும் கோரிக்கை வைத்துள்ளார், ஆனால் அது வெற்றிபெறவில்லை.

பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் வழங்கப்படும் இந்த உதவியை ஏமாற்றிப் பெறும் நபர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : GE2020: புதிய இந்திய வேட்பாளர்கள் இல்லாதது குறித்து பிரதமர் லீ மற்றும் அமைச்சர் சண்முகம் விளக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg