சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,000ஐ கடந்தது..!

Total number of confirmed cases in Singapore crosses 44000
Total number of confirmed cases in Singapore crosses 44,000

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 1) நிலவரப்படி, புதிதாக 215 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,122ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வாக்களிப்பு நிலையம் பற்றிய தகவலை சுலபமாக பெறுவதற்கான இணையதளம்..!

புதிய சம்பவங்களில், 10 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதில் 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 4 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 4 பேர் இதில் அடங்குவர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

இதில் அதிகமானவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat https://sharechat.com/tamilmicsetsg

Related posts