சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு COVID -19 வைரஸ் தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 110ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

குணமடைந்தோர் விவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, எந்த நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. தற்போது வரை, மொத்தம் 78 நபர்கள் முழுமையாக மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்னும் மருத்துவமனையில் உள்ள 32 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் 109

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 70 வயதான சிங்கப்பூர் ஆடவர்.

இவர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது இவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 110

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், விஸ்லெர்ன் டெக்னாலஜிஸில் சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயதான சிங்கப்பூர் ஆடவர்.

இவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; மினிபஸ் ஓட்டுநர் கைது..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil