COVID-19: விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 24 பேரின் வேலை அனுமதி ரத்து..!

24 work pass holders barred from working in Singapore for flouting COVID-19 circuit breaker measures
24 work pass holders barred from working in Singapore for flouting COVID-19 circuit breaker measures (Photo: Roslan RAHMAN / AFP)

COVID-19 சர்க்யூட் பிரேக்கர் விதிகளை மீறியதற்காக மொத்தம் 24 பேரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு, மேலும் அவர்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் (MOM) திங்களன்று (ஏப்ரல் 13) தெரிவித்துள்ளது.

துவாஸ் வியூ சதுக்கத்திற்கு (Tuas View Square) அருகில் அவர்கள் சாப்பிடுவது, பருகுவது மற்றும் குழுக்களாக கூடியிருந்தபோது அவர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து இரத்தம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!

பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளை ஆய்வு செய்துவருவதாக MOM தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் முடிந்தவரை தங்கள் அறைகளில் தங்குவதை உறுதிசெய்வதும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க வேண்டியிருந்தால் மட்டுமே வளாகத்தை விட்டு வெளியேறுவது ஆகியவையும் இதில் அடங்கும்.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து வெளியே செல்லும்போது ஒவ்வொரு முறையும் தங்கள் நேரத்தை பதிவு செய்வது கட்டாயமாகும். அதாவது வெளியே சென்ற நேரம் மற்றும் உள்ளே வந்த நேரம் ஆகியவையை பதிவு செய்ய வேண்டும்.

ஏப்ரல் 11 மற்றும் 13-க்கு இடையில், சிங்கப்பூர் முழுவதும் சுங்கே கடுட் (Sungei Kadut), துவாஸ் மற்றும் பிற இடங்களில் அமைந்துள்ள 600க்கும் மேற்பட்ட தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளை (FCD) அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க “நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம்” – பிரதமர் லீ தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!