சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 43,000ஐ கடந்தது..!

291 new coronavirus cases in Singapore, including 11 in the community
Image Credits : Jagen/Tamil Micset Media

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 27) நிலவரப்படி, புதிதாக 291 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 43,246ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய 6 இடங்கள் வெளியீடு..!

புதிய சம்பவங்களில், 11 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதில் 5 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 6 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 14 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg