சிங்கப்பூரில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தில் S$653,000 மோசடி – 3 பேர் கைது.!

3 arrested allegedly cheating
Pic: SPF

சிங்கப்பூரில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தில் சுமார் 6,53,000 வெள்ளி மோசடி செய்த சந்தேகத்தில் 3 பேரை கடந்த வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர் ஆவார்கள். இந்த மோசடி குறித்துக் கடந்த மாதம் 25ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு ஆடவர்கள் வேண்டுமென்றே தங்களது வங்கி கணக்குகளின் விபரங்களையும், தனிநபர் விபரங்களையும் மூன்றாவது நபரிடம் கொடுத்துள்ளனர்.

சிங்கப்பூர் பாசிர் பாஞ்சாங் வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக புதிய பூங்கா திறப்பு.!

பின்னர், விபரங்களை பெற்றுக்கொண்ட மூன்றாவது நபர் பத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

விபரங்களை கொடுத்ததற்காக இரண்டு ஆடவர்களுக்கும் 9,000 வெள்ளிக்கும் மேல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக ஆடவர்கள் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இழந்த தொகையைத் திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தனர். இதையடுத்து பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் காவல்துறையை அணுகியது.

மோசடியில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 500 ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தனிமைக்கான செலவு அதிகம்.. திரும்ப வர முடியுமோ.. என்ற பல கவலைகளுடன் சொந்த நாட்டுக்கு செல்ல தயங்கும் ஊழியர்கள்!