சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறிய 3 வேலையிடங்கள் மூட உத்தரவு – MOM..!

3 workplaces asked to stop operations for not adhering to safe management measures: MOM
3 workplaces asked to stop operations for not adhering to safe management measures: MOM (Photo: Facebook/Ministry of Manpower)

COVID-19 பரவும் அபாயத்தைக் குறைக்க போதுமான பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் மூன்று வேலையிடங்களை மூடுமாறு மனிதவள அமைச்சகம் (MOM) உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 1) சிங்கப்பூரில் “சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து வணிகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

இதையும் படிங்க : தமிழகத்திற்கு செல்லும் விமானங்கள் குறித்த பட்டியல் வெளியீடு – இந்திய தூதரகம்..!

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மனிதவள அமைச்சகம் (MOM) சுமார் 200-க்கும் மேற்பட்ட வேலையிடங்களை ஆய்வு செய்தது, அதில் இந்த மூன்று வேலையிடங்களும் அடங்கும்.

முதன்முதலில் கடந்த மே 9 அன்று வேலையிடத்தில் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கான தேவைகளைப் பற்றி MOM குறிப்பிட்டு இருந்தது.

இதில் அந்த மூன்று வேலையிடங்கள் மட்டும் தேவையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஊழியர்களை வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க ஏற்பாடுகள் செய்வதற்குப் பதிலாக, அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்தில் வேலைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தியாக MOM பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறிய முதலாளிகளுக்கு, 14 கலவையான அபராதங்களையும் MOM விதித்துள்ளது.

இதையும் படிங்க : வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தல் – ‘அனுமதி ரத்து செய்யப்படலாம்’ : MOM