சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!

30 more migrant worker dormitories cleared of COVID-19 infections
30 more migrant worker dormitories cleared of COVID-19 infections (Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 29 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள், தற்காலிக தங்கும் விடுதிகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மருந்தை மனிதர்களிடம் சோதிக்கவிருக்கும் சிங்கப்பூர்..!

கூடுதலாக, 8 தங்கும் விடுதிகளில் சுமார் 14 பிளாக்குகளில் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று MOM கூறியுள்ளது, இந்த விடுதிகளில் சுமார் 8,400 ஊழியர்கள் தங்கியுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் 60 தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது, தற்போது கொரோனா வைரஸிலிருந்து 90 தங்கும் விடுதிகள் தொற்று இல்லாத இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

60 தங்கும் விடுதிகளில், சுமார் 40 விடுதிகளில் கிருமி தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு, சுமார் 5,500 ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளனர் என்று MOM தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 20 தங்கும் விடுதிகளுக்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்ய பல நிறுவன குழுக்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள், சுமார் 60,000 ஊழியர்கள் தங்குவதற்கு தேவையான கூடுதல் இடம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!