சிங்கப்பூரில் சுமார் 32,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து தற்காலிக இட வசதிகளுக்கு மாற்றம்..!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் சுமார் 32,000 ஆரோக்கியமான ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தற்காலிக இட வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று பரவுவதை கூடுதலாக கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனிதவளத் துறை அமைச்சர் ஜாக்கி மொஹமட் வியாழக்கிழமை (ஜூன் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 517 பேர் பாதிப்பு – 15 பேர் சமூக அளவில் பாதிப்பு..!

விளையாட்டு அரங்குகள், காலியாக உள்ள வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) தொகுதிகள், இராணுவ முகாம்கள், மிதக்கும் ஹோட்டல்கள் மற்றும் மறுவடிவமைப்புக்கு திட்டமிடப்பட்ட தனியார் குடியிருப்புகள் ஆகியவை இந்த தற்காலிக தங்கும் விடுதிகளில் அடங்கும்.

ஒவ்வொரு இருப்பிடத்திலும் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

மேலும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படுவோருக்கு, பிராந்திய மருத்துவ வசதிகள், பொது சுகாதார கிளினிக்குகள் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று திரு ஜாக்கி கூறியுள்ளார்.

மேலதிக மருத்துவ உதவி தேவையில்லாதவர்கள் அவர்கள் குணமடையும் வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் COVID-19 தொற்று பரிசோதிக்கப்பட்டவர்களின் சோதனை முடிவுகள் தெரியும் வரை, அவர்கள் தனிமைப்படுத்தும் வசதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதில் தொற்று உறுதி செய்யப்படும் ஊழியர்கள் பொருத்தமான பராமரிப்பு வசதிக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தவறிய 3 வேலையிடங்கள் மூட உத்தரவு – MOM..!