சிங்கப்பூரில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலிருந்து 41 பேர் நீக்கம்..!

41 cases removed from total COVID-19 tally
41 cases removed from total COVID-19 tally (Photo: REUTERS/Edgar Su)

சிங்கப்பூரின் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கையிலிருந்து 41 COVID-19 பாதிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை நிர்வாகப் பிழைகள் காரணமாக சேர்க்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (செப்டம்பர் 5) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயர்மாடிகளிலிருந்து குப்பை போட்ட 2,200 பேர் மீது நடவடிக்கை..!

அதே போல கடந்த புதன்கிழமை, 41 தொற்று பாதிப்புகளை மொத்த எண்ணிக்கையிலிருந்து நீக்கியதாக அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களாக நிர்வாக பிழைகள் காரணமாக மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக MOH கூறியுள்ளது.

இவை தவறாக பதிவு பதிவுசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது இரு முறை பதிவுசெய்யப்பட்டிருக்கலாம், அல்லது ஆய்வக விசாரணைகள் மற்றும் மருத்துவர்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து மறுவகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சகம் மேலும் கூறியது.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதில் ஆரம்பத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற நிர்வாக தவறுகளை சீரமைத்து, தொற்று சம்பவம் எண்ணிக்கையை சரிசெய்வதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பறவைகளுக்கு உணவு அளிப்போருக்கு கடுமையான அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…