சிங்கப்பூரில் கூடுதலாக 42 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை..!

42 more migrant worker dormitories cleared of COVID-19: MOM
42 more migrant worker dormitories cleared of COVID-19: MOM (Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் கூடுதலாக 42 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் COVID-19 தொற்று முற்றிலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விடுதிகளில் சுமார் 4,000 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சாங்கி விமான நிலையத்தில் ஐந்தாவது முனையத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்..!

மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தங்கு விடுதி ஆபரேட்டர்களை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழு இதை செவ்வாய்க்கிழமை (16 ஜூன்) அறிவித்தது.

இந்த 42 தங்கும் விடுதிகளில், 39 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலை, இரண்டு கட்டுமான தற்காலிக தங்கும்விடுதிகள் ஆகியவை அடங்கும்.

தற்போது 132 தங்கும் விடுதிகள் மற்றும் 14 புளோக்குகளில் உள்ள ஊழியர்கள் முற்றிலும் கிருமித்தொற்று இல்லாத இடங்களில் உள்ளனர் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, கிருமி முற்றிலும் அகற்றப்பட்ட வளாகங்களில் மொத்தம் 75,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டத்தில் மீண்டும் தொடங்குபவை எவை எவை?

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      https://twitter.com/tamilmicsetsg

??Telegram  https://t.me/tamilmicsetsg

?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg