சாங்கி விமான நிலையத்தில் ஐந்தாவது முனையத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்..!

(Photo: AFP)

சிங்கப்பூர் தனது சாங்கி விமான நிலையத்தில் ஐந்தாவது முனையத்தின் கட்டுமான பணிகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்துள்ளார்.

COVID-19 பரவலுக்கு மத்தியில் விமானம் மற்றும் பயணத் துறையின் எதிர்காலம் குறித்து பெரும் நிச்சயமற்ற தன்மைகளை மேற்கோள் காட்டினார் திரு காவ்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டத்தில் மீண்டும் தொடங்குபவை எவை எவை?

நோய் தொற்று பரவல் காரணமாக விமானப் போக்குவரத்துக்கான தேவை குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே இரண்டாம் முனையம் மற்றும் நான்காம் முனையம் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

தொழித்துறை மீண்டு வரும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் திரு காவ் குறிப்பிட்டார், ஆனால் பெரிய அளவில் அதற்கான கேள்விகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முனையம் 5 மற்றும் சாங்கி கிழக்கு வளர்ச்சி திட்டங்கள் வரும் 2030ஆம் ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடைநிறுத்த காலம், தொற்றுநோய்க்கு பிந்தைய பயணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க உதவும் என்று திரு காவ் கூறினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வு வரும் ஜூன் 18 தொடக்கம்..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg

??Telegram  – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg