சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டத்தில் மீண்டும் தொடங்குபவை எவை எவை?

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டத்தில் மீண்டும் தொடங்குபவை அல்லது ஆரம்பிக்கப்படுபவை எவை எவை என்று வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டம் (Phase 2 of reopening) வரும் ஜூன் 18, இரவு 11.59 மணிக்குப் பிறகு தொடங்கும் என்று COVID-19 பல அமைச்சக பணிக்குழு இதனை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வு வரும் ஜூன் 18 தொடக்கம்..!

ஐந்து பேர் வரை ஒன்று கூடும் சிறிய அளவிலான சமூக கூட்டங்கள் மீண்டும் அனுமதிக்கப்படும்.

அதாவது வீட்டிற்குள் பொறுத்தவரை, குடும்பங்கள் எந்த நேரத்திலும் ஐந்து வருகையாளர்களை அனுமதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகங்கள் தங்கள் நிலையங்களை மீண்டும் திறக்கலாம்.

உணவகங்களில் ஐந்து பேர் வரை ஒன்றாக சாப்பிட அனுமதிக்கப்படும். ஆனால், மேஜைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். மேலும், விற்பனை நிலையங்கள் இரவு 10.30 மணிக்கு மது விற்பனையை நிறுத்த வேண்டும்.

உணவகங்களில் (F&B outlets) இசை நேரலை நிகழ்ச்சி, தொலைக்காட்சி மற்றும் காணொளி திரையிடல்கள் அனுமதிக்கப்படாது.

பாடல் அல்லது குரல் பயிற்சி வகுப்புகளைத் தவிர்த்து, கல்வி மற்றும் பிற தனியார் வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம்.

தனிப்பட்ட உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் வீட்டிலிருந்து வழங்கப்படும் சேவைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்.

பதிவுசெய்யப்பட்ட கிளப்புகள் மற்றும் சங்கங்கள் அவற்றின் பதிவு செய்யப்பட்ட வளாகத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்.

வயது மூத்தோருக்கான சுகாதாரச் சேவைகள் உட்பட பிற அனைத்து சுகாதார சேவைகளும் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகியல் சேவைகள் மீண்டும் தொடங்கும்.

விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு இடங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பொது நீச்சல் குளங்கள், உடல் பயிற்சி கூடங்கள், தனியார் கூட்டுரிமை வீடுகளில் உள்ள பொழுதுபோக்கு வசதிகள் முதலியவை மீண்டும் திறக்கப்படும்.

மால்கள், பெரிய கடைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அவற்றுக்கு வெளியே பெருங்கூட்டமோ, நீண்ட வரிசையோ சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கட்டங்கட்டமாக வேலைக்குத் திரும்ப அனுமதி..!!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg

??Telegram  – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg