சிங்கப்பூரில் உணவகங்காடிகளில் நடைமுறையில் உள்ள புதிய உத்தரவு; 4,500 பேருக்கு நினைவூட்டல்.!

4,500 diners reminded dining
Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் உள்ள உணவங்காடிகளில் சாப்பிட்ட பின்னர், தாங்கள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டுகளை அதற்கென ஏற்படுத்தப்பட்டு உள்ள அடுக்கு நிறுத்தங்களில் வைக்கும் விதிமுறை கடந்த ஜூன் 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், உணவங்காடிகளில் சாப்பிட்ட பிறகு தட்டுகளை அதற்கென ஏற்படுத்தப்பட்டு உள்ள அடுக்கு நிறுத்தங்களில் வைக்கும் விதிமுறை குறித்து சுமார் 4,500 பேருக்கு தேசிய சுற்றுப்புற வாரிய அதிகாரிகள் நினைவூட்டியதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று (22-06-2021) கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 31ம் தேதி வரை அதிகாரிகள் நினைவூட்டுவார்கள் என்றும், அந்த காலப்பகுதிகளில் உணவுத் தட்டுகளை அதற்கென உள்ள அடுக்கு நிறுத்தத்தில் கொண்டு போய் வைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 11 பேர் கைது.!

பொதுமக்கள் இந்த புதிய உத்தரவுக்கு தங்களைத் தயார்ப்படுத்த இந்த விதிவிலக்கு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 1ம் தேதி முதல் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மே 14ம் தேதி வாரியம் அறிவித்திருந்தது.

உணவங்காடிகளில் இந்த உத்தரவை முதல் தடவை மீறுவோருக்கு எழுத்து மூலமாக எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு S$300 அபராதம் விதிக்கப்படும். அதன் பின்பும் தொடர்ந்து உத்தரவை மீறுவோருக்கு எதிரான அபராதத் தொகை S$2,000 வரை கூடிக்கொண்டே போகும் என கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சாப்பிட்ட பிறகு சுத்தம் செய்வது மற்றவர்கள் மீதும், துப்புரவாளர்கள் மீதும் அக்கறை காட்டுவதை குறிப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கூறியுள்ளார்.

‘சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகை’- விண்ணப்பிப்பது எப்படி?