சிங்கப்பூர் மெக்டொனால்ட் (McDonald’s) ஊழியர்கள் 5 பேர் COVID-19 வைரஸ் தொற்றால் பாதிப்பு..!

5 McDonald's employees down with Covid-19, all other staff at affected branches on leave of absence
5 McDonald's employees down with Covid-19, all other staff at affected branches on leave of absence

சிங்கப்பூர் மெக்டொனால்ட் (McDonald’s) ஊழியர்கள் 5 பேர் COVID-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக fast-food chain ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.

மெக்டொனால்டு லிடோ, ஃபோரம் கேலரியா (Forum Galleria), பார்க்லேன் மற்றும் கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் விற்பனை நிலையங்களில் அந்த ஐந்து பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : போக்குவரத்துக்கு எதிர்திசையில் லாரியை இயக்கிய ஓட்டுநர் கைது – ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து..!

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, அந்த நான்கு உணவகங்களும் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அவர்கள் மருத்துவ வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களின்படி மருத்துவ பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட கிளைகளில் பணிபுரிந்த மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் 14 நாள் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு, தனிமைப்படுத்துமாறு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!