COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

51-year-old migrant worker Singapore’s youngest COVID-19 fatality
51-year-old migrant worker Singapore’s youngest COVID-19 fatality

சிங்கப்பூரில் COVID-19 காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 31) மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அவர் 51 வயதான வெளிநாட்டு ஊழியர் ஆவார், சிங்கப்பூரில் COVID-19 வைரஸுடன் தொடர்புடைய 24வது மரணம் இதுவாகும். மேலும், இந்த நோயால் இறக்கும் நாட்டின் மிக குறைந்த வயதுடைய COVID-19 நோயாளி இவர் என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் சார்ந்திருப்பை குறைக்க வழி உண்டு – அமைச்சர் சான்..!

சம்பவம் 17329 என அறியப்படும் இவர் சீன நாட்டவர், தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. அதாவது கடந்த மே 1ஆம் தேதி அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த நபர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) இறந்துவிட்டதாக மனிதவள அமைச்சு (MOM) உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தகவலின் படி, அவர் ஏப்ரல் மாத இறுதியில் ICUவில் சிகிச்சை பெற்றுவந்த போது பல உறுப்பு செயலிழப்பு கண்டறியப்பட்டது.

மேலும், சிகிச்சை பலனின்றி அவரின் நிலைமை மோசமடைந்து அவர் உயிரிழந்தார் என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பணிபுரிய ஊழியர்கள் தேடுவதில் சிரமம்..!