கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

நிகோல் நெடுஞ்சாலையில் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) இந்த கைது நடவடிக்கை நடந்ததாகவும், அவர்கள் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

அன்று இரவு 7.54 மணியளவில் ஆறு பேர் கொண்ட இந்த கும்பல் 38 வயதுடைய ஆடவர் ஒருவரை தாக்கி கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ஆடவரிடம் இருந்து பணம், கைபேசி மற்றும் $860 ரொக்கத்தையும் அந்த கும்பல் தாக்கி பறித்ததாக கூறப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து, பெடோக் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு அந்த ஆறு பேரின் அடையாளங்களை கண்டறிந்தனர்.

அவர்களின் ஒருவர் பிணையில் வெளிவந்தவர் என்றும், போதைப்பொருள் தொடர்பாக இரு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட கைபேசியும் மீட்கப்பட்டது. நேற்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் 6 பேரும் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி