COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 605 பேர் பாதிப்பு…!

632 new COVID-19 cases in Singapore, taking total past 19,000
632 new COVID-19 cases in Singapore, taking total past 19,000

சிங்கப்பூரில் நேற்றைய (மே 5) நிலவரப்படி, புதிதாக 632 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 19,410ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் வெளியிட்ட காணொளி..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 15 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய குழுமங்கள்

மேலும் 9 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 60 Benoi Road
  • 100A Central Boulevard
  • கட்டுமானத் தளம் at Clementi N2C3
  • 1 North Coast Drive
  • 31 Sungei Kadut Loop
  • 9 Tech Park Crescent
  • 80 Tuas Avenue 1
  • 15 Tuas View Close
  • 131 Tuas View Square

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 40 போலி செய்திகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது : அமைச்சர் S. ஈஸ்வரன்..!