COVID-19: சிங்கப்பூரில் 40 போலி செய்திகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது : அமைச்சர் S. ஈஸ்வரன்..!

Government has debunked 40 instances of fake news on COVID-19: Iswaran
Government has debunked 40 instances of fake news on COVID-19: Iswaran (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் கடந்த ஜனவரிலிருந்து தற்போதுவரை, COVID-19 சம்மந்தமான சுமார் 40 வதந்திகள், மோசடிகள், பொய்யான தகவல்கள் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சிங்கப்பூரின் தொடர்பு, தகவல் அமைச்சர் S ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளியான அதுபோன்ற பொய்யான செய்திகளை கண்டறிந்து அதற்கு உண்மை நிலவரத்தை விரைவாக வெளியிடுவதில் அதிகாரிகள் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்று: சிங்கப்பூரில் புதிதாக 632 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி..!

நோய் பரவல் ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து பொய்யான தகவல்களின் பரவல் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, COVID-19 சந்தேக நபர்கள் காரணமாக உட்லேண்ட்ஸ் MRT நிலையம் மூடப்பட்டதாக ஜனவரி மாதம் சமூக ஊடக பயனர்கள் குற்றம் சாட்டினர்.

மிக அண்மையில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் சிக்கலை உருவாக்க போலி வீடியோக்கள் பரப்பப்படுவதாக, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.

பொய்யான தகவல்களைப் பரப்பிய சிங்கப்பூரர்கள் மீதும், வெளிநாட்டினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில், தகவல்கள் நம்பகமானவரிடமிருந்து வந்தவையா என்பதையும், அவற்றின் உண்மைத்தன்மையையும் சோதித்து அறிந்த பின்னர், அவற்றை பகிர்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

பொய்த் தகவல் பரவாமல் தடுப்பதில் நாம் அனைவருக்கும் பங்கு உள்ளதை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்கள், அரசு வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் அரசு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சேனல்கள் மூலம் உண்மையான தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம்..!