சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம்..!

Focus on improving the standards of foreign workers dorms - MOM Minister
Focus on improving the standards of foreign workers dorms - MOM Minister (Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் முதிர்ச்சியடைந்தவற்றின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதாவது கடந்த 90களில் இந்தியா சீனா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தங்கும் வசதிகளை ஏற்படுத்த விடுதிகள் அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 3 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

மேலும் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருக்கும் ஊழியர்கள், நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து சமைப்பது, தங்கள் சமய வழிபாடுகளைப் பின்பற்றுவது போன்ற அம்சங்களைக் கவனத்தில் கொண்டு விடுதிகள் அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

காலப்போக்கில், தங்குமிடங்களின் தரத்தை உயர்த்த அரசாங்கம் சட்டங்களை அறிமுகப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் உள்ள தங்கும் விடுதிகளில் சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அமைப்பதும், தனிமைப்படுத்தும் இடங்களை ஒதுக்குவதும் கட்டாயமாக்கப்பட்டதாகக் கூறினார்.

சிறிய தங்கும் விடுதிகளுக்கு அத்தகைய சட்டம் இல்லையென்றாலும், தேசிய சுற்றுப்புற அமைப்பு, கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவற்றின் சட்டங்களுக்கு அவை கட்டுப்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த ஆண்டு “கிரேட் சிங்கப்பூர் விற்பனை” ரத்து..!

கடந்த ஆண்டு மட்டும் உரிமம் பெற்ற தங்கும் விடுதிகளில் 1,200 சோதனைகளும் 3,000 விசாரணைகளும் நடத்தப்பட்டதாகத் திருமதி தியோ கூறினார்.

சட்டங்களை மீறியதற்காக, சுமார் 1,200 முதலாளிகளும், 20 தங்கும் விடுதி நிர்வாகத்தினரும் தண்டிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த இட வசதி மட்டுமின்றி தொழில்நுட்ப தரமும், கூடுதல் சட்டத்திட்டங்களும் தேவை என்றும் அவர் கூறியதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.

Source: Seithi