உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த இந்திய பாதுகாப்புத்துறை!
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு (இந்திய நேரப்படி) நடந்த உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சைத் தேர்வுச் செய்தார்.

இதையடுத்து, முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி தரப்பில் அதிகபட்சமாக, கே.எல்.ராகுல் 66, விராட் கோலி 54, கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், மிட்சேல் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ஹேஷில்வுட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!
பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் 137, லபுஷ்ஷேன் 58 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்திய அணி தரப்பில் பும்ரா 2, முகமது ஷமி, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை 6ஆவது முறையாக வென்று ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த 1987, 1999, 2003, 2007, 2015- ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி 2023- ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனையில் சிக்கிய 3 ஆடவர்கள் – தப்பிக்க முயன்றவரை வளைத்து பிடித்து அதிகாரிகள்
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலக நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.