சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறிய 7 உணவகங்களின் மீது நடவடிக்கை..!

7 more F&B outlets fined for flouting safe distancing rules
(Photo: REUTERS)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறிய 7 உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகரச் சீரமைப்பு ஆணையம் (URA) நேற்று (9 செப்டம்பர்) தெரிவித்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட ஏழு உணவகங்களில், இரண்டு – கிளார்க் கீயில் உள்ள Le Noir, Coyote Ugly உணவகங்கள் ஆகும். இன்று செப்டம்பர் 10 முதல் 19 வரை அமர்ந்து உணவருந்தும் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$300,000 அதிகமான நிதி திரட்டு..!

கடந்த செப்டம்பர் 4 முதல் 6 வரை Boat Quay, Clarke Quay, China Square மற்றும் தான்ஜோங் பாகர் ஆகிய இடங்களில் உள்ள ஏழு உணவகங்களில் பாதுகாப்பு இடைவெளி மீறல்களை URA அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களின் குழுக்களை தெரிந்தே அனுமதித்தது மற்றும் மேஜை தாண்டி குழுக்களை ஒன்றிணைக்க அனுமதித்தது ஆகியவை இதில் அடங்கும்.

குழுக்களுக்கிடையில் குறைந்தபட்சம் 1மீ பாதுகாப்பான இடைவெளியை கவனிக்க தவறிவிட்டன என்றும், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுக்களை ஒன்றாக அனுமதித்ததாகவும் அது குறிப்பிட்டது.

ஒரே குடும்பத்திலிருந்து வந்த நபர்களை மட்டுமே அதுபோன்ற செயல்களில் அனுமதிக்கலாம். மேலும், இதுபோன்ற விதிகளை மீறியவர்களுக்கு S$1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இதே போன்று 17 பேர் கொண்ட குழு உணவகத்திற்குச் சென்ற விவகாரத்தைத் தற்போது URA விசாரித்து வருகிறது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பல நிலை அணுகுமுறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…