சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 85 பேர் திரும்பினர்..!

Coronavirus: 85 Singapore residents evacuated from Saudi Arabia as country suspends all commercial flights
Coronavirus: 85 Singapore residents evacuated from Saudi Arabia as country suspends all commercial flights (Photo: Gulf Insider)

சவுதி அரேபியா அனைத்து வணிக விமான சேவைகளையும் நிறுத்தியதை தொடர்ந்து, மொத்தம் 85 சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாடு திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியா அனைத்து வர்த்தக விமான சேவைகளையும் நிறுத்திய பின்னர் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் நாடு திரும்புவதற்கான விமானத்தை ஏற்பாடு செய்துள்ளதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மொத்தம் 924 பேர் COVID-19 தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் – MOH..!

ரியாத்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் திருப்பி அனுப்புதல் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்த சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூர் வந்ததாக MFA தெரிவித்துள்ளது.

இதில் 85 குடியிருப்பாளர்களில், 40 பேர் சவுதி அரேபியாவில் படிக்கும் மாணவர்கள், மீதமுள்ள 45 பேர் அவர்களைச் சார்ந்தவர்கள்.

அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் அவர்கள் 14 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ததற்காக சவுதி அரசுக்கு சிங்கப்பூர் அரசு நன்றி தெரிவிக்க விரும்புவதாக MFA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 982 பேர் பாதிப்பு..!