COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 982 பேர் பாதிப்பு..!

A total of 982 of Thursday's cases were linked to work permit holders residing in dormitories, MOH later confirmed in a later update.
A total of 982 of Thursday's cases were linked to work permit holders residing in dormitories, MOH later confirmed in a later update (Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 23) நிலவரப்படி, புதிதாக 1,037 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 11,178ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: மேலும் 4 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 25 என்று MOH குறிப்பிட்டுள்ளது. இதில் 22 சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள், 3 பேர் வேலை அனுமதி உடையோர்.

மேலும் 30 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில், வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் யாரும் இல்லை.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 75 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள்

மேலும் ஆறு கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • Blue Stars Dormitory
  • Hulett Dormitory
  • Seatown Dormitory
  • Woodlands Dormitory
  • 12 Loyang Drive
  • 59 Sungei Kadut Loop

இதையும் படிங்க : இந்த ஆண்டு சிங்கப்பூரில் சுமார் 200,000 பேர் வரை வேலை இழக்கக்கூடும்: பொருளியல் வல்லுநர்கள்..!