COVID-19: மேலும் 4 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

COVID-19: Four more foreign worker dormitories declared as isolation areas
COVID-19: Four more foreign worker dormitories declared as isolation areas

COVID-19 பரவுவதைத் தடுக்க மேலும் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

  • துவாஸ் சவுத் தங்கும் விடுதி (Tuas South Dormitory)
  • ஜுராங் பெஞ்சுரு தங்கும் விடுதி 2 (Jurong Penjuru Dormitory 2)
  • CDPL துவாஸ் தங்கும் விடுதி
  • 21B Senoko Loop

ஆகியவை தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (ஏப்ரல் 23) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்த ஆண்டு சிங்கப்பூரில் சுமார் 200,000 பேர் வரை வேலை இழக்கக்கூடும்: பொருளியல் வல்லுநர்கள்..!

இந்த நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கான அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட ப்ளாக்ஸ் (blocks)

Tuas South Street 12- இல் அமைந்துள்ள Tuas South Dormitory – 5, 7, 9, 11, 13 ஆகிய ப்ளாக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளன.

Penjuru Place- இல் அமைந்துள்ள Jurong Penjuru Dormitory 2ல் – 30, 32, 34, 38 ஆகிய ப்ளாக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளன.

6 Tuas South Street 15- இல் அமைந்துள்ள CDPL Tuas Dormitory – 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய ப்ளாக்ஸ் பாதிக்கப்பட்டுள்ளன.

21B Senoko Loop இல் A, B ஆகிய வளாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் மொத்தம் 25 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் இந்தியர் உயிரிழப்பு..!