சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் புதிய தொற்று பரவல் குழுமம் அடையாளம்..!

A new cluster was identified at a dormitory at 15A Senoko Way
A new cluster was identified at a dormitory at 15A Senoko Way (AP Photo/Yong Teck Lim)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 30) நிலவரப்படி, புதிதாக 506 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 34,366ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

புதிய சமூக அளவிலான சம்பவங்களில் ஒன்று சிங்கப்பூரர், ஒருவர் நிரந்தரவாசி, இருவர் வேலை அனுமதி (work permit) வைத்திருப்பவர்கள், மீதமுள்ள சம்பவங்கள் வேலை அனுமதி (work pass) அட்டை உடையவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதில் ஒருவர் பாலர் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சம்பவங்களில், மொத்தம் 501 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

26 வயதான இந்தியருக்கு கடந்த வெள்ளிக்கிழமை COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது மற்ற சம்பவங்களுடன் தொடர்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் 99 சதவீதம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய் குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி 15A Senoko Way புதிய கிருமித்தொற்றுக் குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கவைக்க பள்ளி வளாகம் ஏற்பாடு..!