ஆப்கான் மக்களை ஜெர்மனுக்கு அழைத்துச் சென்ற சிங்கப்பூர் விமானப் படை விமானம்!

Photo: Minister Ng Eng Hen Official Facebook Page

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்குப் பயந்து, தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மரினா பே ஈஸ்ட் கார்டனில் ​​ஆடவரை கடித்த 2மீ நீளம் உள்ள பாம்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பல்வேறு நாடுகளும் விமானங்கள் கொடுத்து உதவி வருகின்றன. இந்த நிலையில், சிங்கப்பூர் விமான படைக்கு சொந்தமான விமானப் படை A330 multi-role tanker transport (MRTT) என்ற விமானம், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவுக்கு உதவும் வகையில் ஆகஸ்ட் 26- ஆம் தேதி அன்று இரவு சாங்கி விமானப் படைத் தளத்தில் இருந்து கத்தார் நாட்டு புறப்பட்டு சென்றது. அதைத் தொடர்ந்து, கத்தார் நாட்டில் இருந்து 149 பேருடன் புறப்பட்ட விமானம் ஜெர்மனியில் தரையிறங்கியது. கத்தாரில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை, ஜெர்மனி உள்ளிட்ட இதர நாடுகளுக்கு அழைத்துச் செல்ல விமானம் உதவும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ‘MRTT’ விமானத்தில் 266 பேர்வரை பயணம் செய்யலாம் அல்லது 37,000 கிலோ கிராம் எடையுடைய சரக்குகளை ஏற்றிச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அங் மோ கியோ அவென்யூ 4-ல் உள்ள பிளாக் 113-ல் வசிப்போருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

இதனிடையே, ஆப்கானிஸ்தானில், நேற்றுடன் மீட்புப் பணிகளை முடித்துக் கொள்ளப்போவதாக பிரிட்டிஷ் ஆயுதப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால், பிரிட்டன் அதன் விமானச் சேவைகளையும் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.