சிங்கப்பூரில் சுமார் 11,000 பொதுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு நோய்த்தொற்று சோதனை..!

All bus drivers among 11,000 transport staff to be tested for Covid-19
All bus drivers among 11,000 transport staff to be tested for Covid-19 (Photo: Istock)

சிங்கப்பூரில் பொதுப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் வேலைசெய்யும் கிட்டத்தட்ட 11,000 பேருக்கு கிருமித்தொற்று சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங் போக்குவரத்து நிலையத்தில் நோய்த்தொற்று குழுமம் ஒன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதை, இதனை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூர்-UAE உறவை பிரதிபலிக்கும் வகையில் புர்ஜ் கலீபாவில் சிங்கப்பூர் தேசியக் கொடிக் காட்சி..!

அந்த நோய் குழுமத்துடன் 100 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றுக்கான சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அந்த சோதனைகள் பேருந்து ஓட்டுநர், நிர்வாகப் பணியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேவை இருக்கும் பட்சத்தில் சில சேவைகளை நிறுத்தப்படலாம் என்று சுகாதார அமைச்சு  (MOH)  மற்றும் நிலப்போக்குவரத்து ஆணையமும் (LTA) தெரிவித்துள்ளன.

ஆனால் பொதுப் போக்குவரத்தில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளும் இடையேயான தொடர்பு தற்காலிகமானது என்பதால், அனைவரும் முகக்கவசங்களை அணிந்திருப்பதால், பயணிகளுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க : தேசிய தினத்தன்று பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg