மலேசியா செல்லும் அனைத்து VTL பயணிகளுக்கும் புதிய அப்டேட்

Malaysia Airports/Facebook

மூன்று பயணத் திட்டங்களின்கீழ் நாட்டிற்கு வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான கோவிட்-19 சோதனைகளை மலேசியா புதுப்பித்துள்ளது.

விமானம் மற்றும் தரை வழியாக தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தின்கீழ் (VTL) மலேசியா செல்வோர், ஆறு நாட்களுக்கு கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலையை விட்டு விலகி பாதசாரிகளின் நடைபாதையில் சீறிப்பாய்ந்த கார் – இருவர் காயம்

சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கும் இந்த புதிய தேவை பொருந்தும்.

அதே போல, லங்காவி சர்வதேச பயண திட்டம் (LITB) மற்றும் குறுகிய கால வணிக வருகையாளர்களுக்காக ஓரிட மையம் (OSC) ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கும் அது பொருந்தும்.

இந்தத் தேவை இன்று முதல் (டிச.09) அமலுக்கு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

ஓமிக்ரான் கிருமி பரவுவதை தடுக்க தற்போதைய முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை அந்த சோதனை முறை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

VTL பயணிகள் மலேசியாவிற்கு வந்தவுடன் நிபுணத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்கு உட்பட வேண்டும்.

விமானத்தில் வருபவர்களுக்கு RT-PCR சோதனை முறையும், மற்றும் நில வழியாக வருபவர்களுக்கு RTK-Ag சோதனை முறையும் பின்பற்றப்படுகிறது.

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட உமிழ்நீர் ART கருவி – PCR சோதனையைப் போலவே துல்லியமானது!