வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

Bangladeshi arrested ISA
Bangladeshi arrested under ISA following investigations into 'terrorism-related activities'

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 26 வயதான பங்களாதேஷ் ஆடவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் முதற்கட்ட விசாரணைகளில், அஹ்மத் ஃபைசல் என்ற அந்த ஆடவர் தீவிரவாத சிந்தனைகளையும், சமயத்திற்கு ஆதரவாக வன்முறையை மேற்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் MHA குறிப்பிட்டுள்ளது.

இரு வெளிநாட்டவர்களிடம் லஞ்சம், பாலியல் சேவைப் பெற்றதாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

ஃபைசல், 2017ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவர் தீவிரவாத சித்தாந்தம் கொண்ட குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், கடந்த நவம்பர் 2ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக அவர், சமூக ஊடகங்களில் வன்முறையை ஆதரிக்கும் பதிவுகளை பதிவேற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட 37 பேரில் இவரும் ஒருவர்.

ஆனால், பிரான்சில் நடந்த சம்பவங்களுடன் ஃபைசலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று MHA கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தற்கொலை… மனிதவள அமைச்சகம் விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…