ஏறக்குறைய 5 மாதங்கள் மருத்துவமனையில் போராடி குணமடைந்த வெளிநாட்டு ஊழியர் – தன் பிறந்த குழந்தையை காண ஆர்வம்..!

Bangladeshi who was critically ill with COVID-19 discharged from hospital after nearly 5 months
Bangladeshi who was critically ill with COVID-19 discharged from hospital after nearly 5 months (Photo: Facebook/Tan Tock Seng Hospital)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றில் கடுமையாக நோயுற்றிருந்த பங்களாதேஷ் ஊழியரான ராஜு சார்க்கர், ஏறக்குறைய ஐந்து மாதங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர், இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) குணமடைந்து திரும்பினார்.

சம்பவம் 42ஆக பட்டியலிடப்பட்ட திரு.ராஜுவுக்கு, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் வெளியீடு..!

கடந்த மார்ச் மாதம், ராஜு ICUவில் இருந்தபோது அவரது மனைவி பங்களாதேஷில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் என்ற செய்தியை நாம் முன்னேரே அறிந்திருப்போம். அவரது மனைவிக்கு உதவி செய்யும் நோக்கில் நன்கொடை திரட்ட இங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கைக்குழந்தைக்குத் தேவையான பால்மாவு, விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் அன்பளிப்பாக வழங்கினர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில், அவரது உடல்நிலை தேறியபோது அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று, டான் டோக் செங் மருத்துவமனையில் இறுதியாக COVID-19 தொற்றுக்கு எதிரான வலிமிகுந்த நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குணமடைந்து திரு சார்க்கர் திரும்பினார்.

அவரது இந்த மீட்பு பயணம் தங்கள் பாதுகாப்பு குழுக்களில் பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவமனை மேலும் குறிப்பிட்டுள்ளது.

விரைவில் (அவர்) தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மீண்டும் ஒன்றிணைவார் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளது.

தற்போது நான் குணமாகி வருகிறேன். என் மனைவியையும் பிள்ளையையும் காணும் வாய்ப்பு கிடைக்க, எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்,” என அனைவரிடமும் திரு. ராஜூ கேட்டுக்கொண்டார் .

இதையும் படிங்க : குறிப்பிட்ட குழுவினருக்கு எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க சிங்கப்பூர், மலேசியா ஒப்புதல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg