குறிப்பிட்ட குழுவினருக்கு எல்லை தாண்டிய பயணத்தை அனுமதிக்க சிங்கப்பூர், மலேசியா ஒப்புதல்..!

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இருநாடுகளுக்கும், வணிக மற்றும் வேலை நோக்கங்களுக்காக நீண்டகால குடிநுழைவு அனுமதி வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் உட்பட சில குழுக்களுக்கு எல்லை தாண்டிய பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மற்றும் மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தொலைபேசி அழைப்பில் இது குறித்து விவாதித்தனர் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நோய்த்தொற்று பாதித்த வெளிநாட்டு ஊழியர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழப்பு – MOH

இரு தலைவர்களும் வெவ்வேறு குழு பயணிகளுக்கு Reciprocal Green Lane (RGL) மற்றும் Periodic Commuting Arrangement (PCA) ஆகியவற்றை நிறுவ ஒப்புக்கொண்டனர்.

அதாவது அத்தியாவசிய வர்த்தக பயணத்திற்கும் மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக எல்லை தாண்டிய பயணத்திற்கும் இந்த RGL உதவும்.

மேலும் PCA குறிப்பிட்ட காலத்துக்குப் பயணம் செய்வதற்கு உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்கள் தங்கள் வேலை முடிந்த பின்னர் விடுப்புக்காக தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியும், மேலும் விடுப்புக்குப் பிறகு மீண்டும் வேலைசெய்யும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் MFA தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கட்டுமானம், கப்பல் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வைக் கழிவு நீட்டிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg