வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் தடைகள் கட்டங் கட்டமாக தளர்த்தப்படும்!

(PHOTO: Bloomberg)

வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் தடைகள் படி படியாக தளர்த்தப்படும் என்று கொவிட்-19 சிறப்பு பணிக்குழுவின் தலைவர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதையும், கிருமித்தொற்றானது கட்டுப்பாட்டில் இருப்பதையும் எண்ணி இந்த தடைகள் அகற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் லீ மீது அவதூறு வழக்கு.. S$133,000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் என்றும், அவர்களுக்கு கிருமித்தொற்று பாதிப்புகள் அதிகளவு குறைந்திருந்தாலும் தங்கும் விடுதிகளின் சூழ்நிலைகள் மாறுபட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழியர்களில் ஒரு சிலருக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அது மற்ற ஊழியர்களுக்கும் எளிதாக பரவக்கூடிய வாய்ப்பு தங்கும் விடுதிகளில் அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விடுதிகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் செயலில் இருந்தாலும் அங்கு கிருமி தொற்று வேகமாக பரவும் அபாயம் அதிகம் என்றும் ஊழியர்கள் நெருக்கமாக வசிப்பதை குறைப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றானது இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பதால் வெளிநாட்டு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து உறவாட அனுமதிப்பது ஆபத்தான செயல் என்று பிரதமர் லீ சியன் லூங் முன்னர் தெரிவித்தார்.

இது போன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் படி படியாக வெளிநாட்டு ஊழியர்கள் நடமாடும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று திரு வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வந்த 11 work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று