சிங்கப்பூரில் பிப். 14 முதல் தடுப்பூசி தகுதியை தக்க வைத்துக்கொள்ள அலைமோதும் கூட்டம்…!

Photo: Ministry Of Health/Facebook Page

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே சில தடுப்பூசி நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அங்கு தங்களின் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனர்.

சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!

சிங்கப்பூரில் சமூக அளவில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடைசி டோஸுக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் நினைவூட்டியது.

அமைச்சகத்தின் புதிய கொள்கையின் படி, திங்கள்கிழமை (பிப்ரவரி 14) முதல் தடுப்பூசிக்கான தகுதியை பெற, தகுதியான நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

அதாவது, 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் தங்கள் 2 டோஸ் முடிந்த 270 நாட்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ராஃபிள்ஸ் சிட்டி கன்வென்ஷன் சென்டரில் உள்ள தடுப்பூசி நிலையத்தில் ​​20க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் தொடர்ந்து நினைவுபடுத்தி வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்