ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன்.. கைது செய்தது போலீஸ்

boy-robbery-arrested
Photo: SPF for illustration purposes

சிங்கப்பூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் செப். 18 நடந்த இந்த சம்பவத்தில், கத்தி முனையில் ஒருவரை மிரட்டி S$827 மதிப்புள்ள பணத்தையும், S$181.20 மதிப்புள்ள சிகரெட்டுகளையும் பறித்து சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் விபத்தில் சிக்கி மரணம்

இதனை அடுத்து அந்த சிறுவன் சம்பவம் நடந்த 10 மணிநேரத்திற்குப் பின் கைது செய்யப்பட்டார்.

தெம்பனீஸ் சென்ட்ரலில் உள்ள கடை ஒன்றில் அன்று காலை 5:36 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல் படை கூறியது.

முதற்கட்ட விசாரணையில், சிறுவன் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் இருந்து சிகரெட்டுகள் மற்றும் S$30 ரொக்கத் தொகையும் மீட்கப்பட்டன.

ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுவன் மீது இன்று (செப். 20) குற்றம் சாட்டப்படும்.

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்