தனிமை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றவர் உட்பட இருவர் மீது குற்றச்சாட்டு

ICA

சிங்கப்பூர் குடிமக்கள் இருவர் மீது தொற்று நோய்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) குற்றஞ்சாட்டியுள்ளது.

அவர்களில் ஒருவர் 32 வயதான லீ யி ஷெங் டேரில் பால், அவர் தனது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (SHN) மீறி முகக்கவசம் அணியாமல் பலமுறை வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகளை கூடுதலாக தளர்த்திய சிங்கப்பூர்

மற்றொருவர் 65 வயதான ஜெராமிர் சிங் s/o தோவா சிங், இவரும் SHN விதிமுறையை கடைபிடிக்கத் தவறியதாக கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

கடந்த ஜூன் 29 அன்று லீ சிங்கப்பூர் வந்தடைந்தார், மேலும் அவர் வசிக்கும் இடத்தில் ஏழு நாட்கள் SHN உத்தரவை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

ஆனால் அடுத்தநாள், தெம்பனீஸில் உள்ள ஒரு காஃபி கடையில் இரவு உணவு வாங்குவதற்காக முகக்கவசம் அணியாமல் லீ தனது வசிப்பிடத்தை விட்டுச் சென்றதாக ICA குற்றம் சாட்டியுள்ளது.

பின்னர் அதே நாளில், தெம்பனீஸில் சாஃப்ராவில் முய் தாய் பாடத்தில் கலந்து கொள்வதற்காக அவர் மீண்டும் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு நபர்:

ஜெராமிர் சிங், கடந்த ஆகஸ்ட் 27 அன்று அவர் சிங்கப்பூர் வந்தார். ​​

SHN விண்ணப்பத்தில் விண்ணப்பத்தில் தவறான தகவலை வழங்கிதற்காக, தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்