சிங்கப்பூர் வேலைவாய்ப்பு: தொடக்கமே நல்ல சம்பளம்.. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குவிந்த விண்ணப்பம்

bus driver job 5k-salary-overwhelming-response
Lionel Lee

சிங்கப்பூரில் ஓட்டுனர்களுக்கு வேலைவாய்ப்பு, தொடக்க ஊதியமே S$5,000 வழங்கப்படும் என்று முன்னர் நாம் பதிவிட்டு இருந்தோம்.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

அது மட்டுமல்லாமல் வேலைக்கு சேரும் ஓட்டுனர்களுக்கு சிறப்பு சலுகையாக S$10,000 போனஸும் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியது.

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

உள்ளூர் பேருந்து நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெஸ்ட்பாயிண்ட் ட்ரான்ஸிட் பிரைவேட் லிமிடெட் எனும் அந்த சிங்கப்பூர் நிறுவனம் முதல் சுற்று விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கடந்த ஜன. 15 அன்று விண்ணப்பம் ஏற்பதை முடித்துக்கொண்டது.

அந்த முதல் சுற்று விண்ணப்ப காலத்தில் தேவைப்படும் 10 பேருந்து ஓட்டுநர்களுக்கு நேற்றைய (ஜன.22) நிலவரப்படி, சுமார் 1,292 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அந்த 1,292 விண்ணப்பதாரர்களில் 450 பேர் சிங்கப்பூரர்கள், அதிலும் 30 பேர் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மதர்ஷிப்பிடம் பேசிய வெஸ்ட்பாயிண்ட் ட்ரான்சிட் வணிக மேம்பாட்டு இயக்குனர் லியோனல் லீ; அதிகமான வேலை விண்ணப்பங்கள் வந்தது தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறினார்.

விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதம் பேர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள் (PR) என்று லீ கூறினார்.

மீதமுள்ள 40 சதவீதம் பேர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சீனா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றார்.

வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் ஆண்கள் என்றும், சுமார் 10 முதல் 20 பெண்களும் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார் .

வேலைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம், செல்லுபடியாகும் வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம் மற்றும் தொழிற்கல்வி உரிமம் இருக்க வேண்டும்.

அடுத்த சுற்று நேர்காணலில் இருந்து மேலும் 20 ஓட்டுனர்களை வேலைக்கு எடுக்க அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது, இந்த நேர்காணல் வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் முடிவடையும்.

வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு..