சிங்கப்பூரில் ஹவ்காங் காப்பிக் கடையில் சண்டை – 5 பேர் கைது..! (காணொளி)

Chairs, glass and punches thrown during fight at Hougang coffee shop: 5 arrested
(Photo: STOMP)

ஹவ்காங் அவென்யூ 8இல் உள்ள ஒரு காபி கடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (ஆக. 9) ஏற்பட்ட சண்டையில் 52 முதல் 65 வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிளாக் 631 ஹவ்காங் அவென்யூ 8இல் இரவு 10.33 மணிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று கண்டுபிடிப்பு – 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

“சண்டை நடந்தபோது நான் காபி ஷாப்பில் குடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அது தொடங்கியது பற்றி தெரியாது” என்று ஸ்டாம்ப் வாசகர் குறிப்பிட்டு உள்ளார்.

சுமார் 10 நிமிடங்கள் கழித்து காவல்துறையினர் வந்து காபி ஷாப் இடத்தை சுற்றி வளைத்தனர்.

அங் மோ கியோ காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 11) சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

காபி ஷாப்பில் இருந்தபோது இரண்டு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை இன்று தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும் / அல்லது $5,000 அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் மீண்டும் பணியைத் தொடங்க கூடுதல் நடவடிக்கைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg