சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 24 மணி நேர மருத்துவ உதவி செய்துவரும் தொழில்நுட்பம்..!

Chatbot provides 24-hour medical assistance to foreign workers in Singapore
Chatbot provides 24-hour medical assistance to foreign workers in Singapore (Nuria Ling/TODAY)

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் Chatbot சிங்கப்பூரில் உள்ள ஆறு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.

ஊழியர்களின் ஆரோக்கியத்தை உடனடியாக கண்காணிக்கவும், தேவைப்படும்போது விரைவாக பதிலை மருத்துவர்கள் வழங்கவும் இது பயன்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!

SGDormBot என பெயரிடப்பட்ட இதை, AI healthcare startup Bot MD உடன் இணைந்து தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS) உருவாக்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும் செய்திகளுக்கு அந்த தொழிற்நுட்பம் உடனடி பதிலை பயனருக்கு அனுப்புகிறது. இதில் 1000க்கும் அதிகமான தொற்று பாதித்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர்.

NUHS அதன் மருத்துவ கவனிப்பின் கீழ் உள்ள ஆறு தங்கும் விடுதிகளில் இதனை செயல்படுத்துகிறது.

அதாவது சுங்கே தெங்கா லாட்ஜ், துவாஸ் சவுத், Acacia Lodge, Kian Teck Hostel, Kian Teck Dormitory மற்றும் SCM துவாஸ் லாட்ஜ் ஆகியவற்றில் செயல்படுத்தப்படுகின்றன.

எப்படி பயன்படுகிறது ?

வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்படும் செய்திக்கு, அவர்களின் உடலின் வெப்பம், இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை Chatbot பதிவு செய்கிறது.

பதிவு செய்யப்பட்ட அவற்றுள் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் இருப்பின், Chatbot குறுஞ்செய்தி எச்சரிக்கைகளை அனுப்பும்.

அதாவது 8 பேர் கொண்ட மருத்துவக் குழு அவற்றைக் கண்காணித்து, உரிய மருத்துவ நிபுணர்களுக்கு அதை அனுப்பி வைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான பராமரிப்பை வழங்க மருத்துவ நிபுணர்கள் ஏற்பாடு செய்வார்கள்.

இதையும் படிங்க : COVID-19 கிருமித்தொற்றைக் குணப்படுத்தும் மருந்தை மனிதர்களிடம் சோதிக்கவிருக்கும் சிங்கப்பூர்..!