குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… பெற்றோர்கள் மத்தியில் உள்ள மனக்கவலை

Facebook/Chan Chun Sing

சிங்கப்பூரில் 5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசிப் போடும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனாலும் கூட தடுப்பூசி மீதான அச்சம் கலந்த மனக்கவலை இன்னும் பெற்றோர்களுக்கு நீக்கவில்லை.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”

அதாவது இந்த கொரோனா தடுப்பூசி, நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமோ? என்ற மனக்கவலை அதிகமான பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வாமை, தோல் அரிப்புப் போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதுக் குறித்தும் பெற்றோர்கள் கேள்விகளை எழுப்பினர்.

கடந்த புதன் கிழமை நடந்த கலந்துரையாடலில் ஏறக்குறைய 1,300 பெற்றோர்கள் இதுதொடர்பாக சுமார் 900க்கும் மேற்பட்டக் கேள்விகளைக் கேட்டனர்.

கல்வி அமைச்சம், சுகாதார அமைச்சகம் மற்றும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவை கூட்டமாக இந்த கலந்துரையாடல் நிகழ்வை நடத்தின.

அதில் தடுப்பூசி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி அதிகமானோரிடம் இருந்து கேட்கப்பட்டது.

12,000 நிறுவனங்கள் ஆய்வு: வேலையிடத்தில் விதிமீறல்…சுமார் S$141,000க்கும் அதிகமான அபராதம் விதித்துள்ள MOM