சிங்கப்பூரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

சிங்கப்பூரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Photo: Motherhip

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சிங்கப்பூர் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்திய விமான நிலையங்களில் மீண்டும் RT-PCR சோதனையா?

தேவாலயங்களில் நேற்று (டிச.24) நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர். இயேசு பிறப்பை தேவலங்களில் மக்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து, கேக் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

“இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்

அதேபோல், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். அதே சமயம், சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், வெளிநாட்டு ஊழியர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினர். வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.