கிறிஸ்துமஸையொட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பு பைகளை வழங்கிய 9 வயது சிறுவன்… குவியும் பாராட்டு!

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் 9 வயது சிறுவன் நோவா (Noah), கிறிஸ்துமஸ் பண்டிகையை மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்து, அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தான். இது தொடர்பாக, தனது குடும்பத்திடம் தனக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அதற்காக அந்த பணத்தை நன்கொடையாக தாருங்கள் என தெரிவித்த சிறுவனுக்கு, அவரது குடும்பம் சரி செய்யலாம் என்று உறுதியளித்திருந்தது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

இதையடுத்து, தனது குடும்பத்தினர் அளித்தப் பணத்தைக் கொண்டு, தண்ணீர் பாட்டில்கள், சோப்புகள், டூத் பேஸ்ட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பேக்குகளை வாங்கினார். அதனை குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் செட் செட்டாக பைகளில் போட்டு, அதுபோன்று 30 பேக்குகளைத் தயார் செய்தார்.

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

பின்னர், அந்த அன்பளிப்பு பைகளை தனது குடும்பத்துடன் தோ பயோவில் (Toa Payoh) உள்ள கட்டுமானத் தளத்திற்கு கொண்டு சென்ற சிறுவன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant Workers) அன்பளிப்பு பைகளை வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிடம் இருந்து இரண்டு தங்கக் கட்டிகள் பறிமுதல்!

இந்த தகவலை ‘ItsRainingRaincoats’ என்ற தொண்டு அமைப்பு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வயதில் சிறியவராக இருந்தாலும், அந்த சிறுவனின் உதவும் உள்ளதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.