சிங்கப்பூரில் இனி தடுப்பூசி போட்டுகொண்டாள் மட்டுமே திரையரங்குகளுக்கு செல்லலாம்

Golden Village VivoCity/Google Maps and Lean Jinghui

புதிய தடுப்பூசி-வேறுபாடு பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் நேற்று அக்டோபர் 13 முதல் சிங்கப்பூர் முழுவதும் உள்ள மால்கள், உணவங்காடி நிலையங்கள் மற்றும் காபி கடைகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

புதிய நடவடிக்கையின்கீழ், தடுப்பூசி போடப்படாத நபர்கள் சிங்கப்பூரில் உள்ள மால்கள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

ஜூரோங் தங்கும் விடுதியில் தரமில்லாத உணவு வழங்கல் போன்ற மீறல்கள் குறித்து புகார் – MOM விசாரணை

தற்போது, ​​பொதுவாக மால்களுக்குள் அமைந்திருக்கும் திரையரங்குகள், தடுப்பூசி போடப்படாத அரங்குகளை முற்றிலுமாக அகற்றிவிட்டன. இதனால் தடுப்பூசி போடாதவர்கள் அங்குள்ள திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க இயலாது.

அனைத்து முக்கிய திரைப்பட ஆப்பரேட்டர்களும் அக்டோபர் 13 முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு மட்டுமே அரங்குகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.

ப்ரொஜெக்டர் போன்ற சுயாதீன அரங்குகள் கூட முழுமை-தடுப்பூசி அரங்குகளின் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூரின் மிகப்பெரிய சினிமா ஆபரேட்டரான கோல்டன் வில்லேஜ் (Golden Village), அக்டோபர் 13 முதல் தீவுமுழுவதும் தடுப்பூசி போட்டுகொள்ளதாக நபர்களுக்கான அரங்குகளை நீக்கியிருப்பதை உறுதிப்படுத்தியது.

இருப்பினும், கோல்டன் வில்லேஜ் (Golden Village) மற்றும் ஷா (Shaw) போன்ற சில திரையரங்குகள், கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட PET சோதனையில் “நெகடிவ்” முடிவைக் காட்டக்கூடிய தனிநபர்கள் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, Vaxxed அரங்குகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளன.

“சிங்கப்பூர்-சென்னை-திருச்சி” இடையே கூடுதல் விமான சேவை