கொரோனா வைரஸ்: டாக்ஸி ஓட்டுனர்களுக்கு $10 மில்லியன் கூடுதல் உதவித் தொகை..!

ComfortDelgro
ComfortDelGro rolls out $10m in additional aid package for cabbies (Photo: Straits Times)

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட ComfortDelGro டாக்சி ஓட்டிகளுக்கு கூடுதல் நிதி உதவியை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இதற்காக டாக்ஸி நிறுவனம் ஏப்ரல் இறுதி வரை சுமார் $10 மில்லியன் வாடகை தள்ளுபடியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அதிக பணத்தொகையை அறிவிக்கத் தவறிய பெண்ணுக்கு $6,000 அபராதம்..!

இன்று பிப்ரவரி 21 முதல் மார்ச் இறுதி வரை ஒவ்வொரு டாக்ஸிக்கும் தினசரி $16.50 வாடகை தள்ளுபடி வழங்கப்படும் என்று ComfortDelGro கூறியுள்ளது. இதன் மூலம் டாக்சி ஓட்டிகள் $660 சேமிக்கலாம்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும் தினசரி $10 தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“கட்டணத் தள்ளுபடி, அரசாங்க மானியத்துடன் சேர்த்து டாக்சி ஓட்டிகள் மார்ச் வரை 36.50 வெள்ளியும், பிறகு ஏப்ரல் மாதத்தில் 30 வெள்ளியும், மேலும் மே மாதத்தில் 20 வெள்ளியும் நாளொன்றுக்கு வாடகை தள்ளுபடி பெறுவர்,” என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 1 புதிய COVID-19 பாதிக்கப்பட்ட நபர் உறுதி; 3 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!