சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்.!

Community visited places
Pic: ION Orchard web/ Far East Malls web

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சைனா டவுன், ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மூதாட்டி உயிரிழப்பு.!

ஜூன் 8ம் தேதி அன்று நான்கு புதிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது:

  • ஜூன் 03: People’s Park Complex
  • ஜூன் 03 – 06: Ion Orchard கடைத்தொகுதியில் உள்ள Four Leaves கடை
  • ஜூன் 06: The Centrepoint கடைத்தொகுதியில் உள்ள Decathlon
  • ஜூன் 06: Orchard Central-ல் உள்ள UNIQLO கடை
Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு பதில் 3 அல்லது 4 சிங்கப்பூர் ஊழியர்களை அமர்த்தும் நிலை..!