கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்

(Photo: TODAY)

சாங்கி MRT டிப்போவுக்கு அருகிலுள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில், விபத்து காரணமாக 29 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் 5 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

சிங்கப்பூரில் டாக்ஸி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி!

அதனை அடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அவர்களை பாதுகாக்கவும், தேவையான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில், நேற்று அதே போல ஒரு வேலையிட மரணம் நிகழ்ந்துள்ளது.

கோ செக் லிம் (Koh Sek Lim) சாலையில் சமீபத்திய இந்த விபத்து நடந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 9.58 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தகடு குவியல்களை பிரித்தெடுக்கும் போது, ​​வெல்டிங் உடைந்து, தகடு குவியலின் ஒரு பகுதி அந்த ஊழியர் மீது விழுந்தது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், என்று LTA கூறியுள்ளது.

தகடு குவியல்கள், பொதுவாக எஃகு, மரம் அல்லது கான்கிரீட் ஆகியவற்றால் ஆனவை. அவை நிரந்தர அல்லது தற்காலிக கட்டமைப்புகளாக இருக்கலாம்.

MOM தகவலின் படி, அந்த ஊழியர் BLT Geoworks பணியாற்றியதாக தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கினர்” – அமைச்சர் டான் பெருமிதம்!

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…