பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற மேலும் 100 பேருக்கு அபராதம்..!

Coronavirus: 100 more people fined for not wearing masks in public

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற சுமார் 100 பேருக்கு (ஏப்ரல் 17) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை முந்தைய நாளில் இருந்ததை விட இருமடங்கு அதிகம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி முகநூல் பதிவில், மேலும் 150 பேர் உணவகங்களில் உணவருந்தியதற்காகவும், பொது இடங்களில் சுற்றித் திரிந்ததற்காகவும், மேலும் பாதுகாப்பான இடைவெளி மீறல்களுக்கும் அபராதங்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற 50 பேர் பிடிபட்டனர்..!

ஒரு மாத கால சர்க்யூட் பிரேக்கர் என்னும் நடவடிக்கையின் போது, பல சிங்கப்பூரர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருப்பதன் மூலம் சமூக பொறுப்புணர்வுடன் உள்ளனர் என்றும், பெரும்பான்மையினரின் முயற்சிகளை வீணாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமலாக்க அதிகாரிகளுக்கு ஆதரவை வழங்கவும் திரு மசகோஸ் வலியுறுத்தினார்.

முகக் கவசம் அணிய தவறியவர்களுக்கு, முதல் குற்றத்திற்கு S$300 அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் அதிக அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். மோசமான வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் – மீறினால் அபராதம்..!